Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு, மீண்டுமா?

வலிமை அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகின்றார்.

அதோடு வலிமை படத்தில் காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்களாம்.

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தொடர்ந்து நடைபெறாமல், நாட்கள் தள்ளி தள்ளி தான் நடந்து வருகின்றது.

அப்படியிருக்க, மீண்டும் வலிமை படப்பிடிப்பிற்கு ஒரு பாதிப்பு வந்துள்ளது, இந்த முறை கொரோனா மூலம் வந்துள்ளது.

ஆம், வலிமை படத்தின் கொரோனா வைரஸால் சில நாட்கள் நிறுத்தி வைத்திருக்கின்றார்களாம், இதனால், படப்பிடிப்பு சொன்ன தேதியில் முடியுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

இதோடு சிம்புவின் மாநாடு படமும் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.