Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளிவருமா..? படத்தின் தயாரிப்பாளர் கூறிய தகவல்

விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இப்படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், சாந்தனு, kpy தீனா, ஸ்ரீநாத், சீமான் உள்ளிட்ட பலர் நடித்து முடித்துள்ளனர்.

சமீபத்தில் கூட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து ரசிகர்களும் காத்து கொண்டிருக்கும் ஒரே விஷயம், படத்தில் ரிலீஸ் தான்.

ஆம் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளிவரும் என்று சில தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில கசப்பான சம்பவங்களால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளது என்று பலராலும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மனைவி விமலா ராணி அண்மையில் பேட்டி அளித்த போது "மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவர விஜய் தான் முக்கிய காரணம் அதில் லோகேஷும் மிகவும் கவனமாக இருந்தார்" என்று கூறியுள்ளார்.

இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் இடையே படம் எப்போது தான் வெளிவரும் என்று ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.