Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று நடக்கும் கொரோனா பிரச்சனையை அன்றே படத்தில் காட்டிய முக்கிய இயக்குனர்! மறக்க முடியுமா

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பரவி வருகிறது. காற்றின் மூலம் வேகமான பரவும் தன்மை கொண்டதால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் நாளை ஊரடங்கு முறையை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா படங்கள் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் போலவே காற்றில் வேகமான பரவும் தன்மை கொண்ட ஃப்ளூ காய்ச்சலை மையமாக கொண்டு கடந்த 2014 ம் வருடத்திலேயே இயக்குனர் பாலாஜி மோகன் படம் இயக்கினார்.

மலையாள நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா, அர்ஜூனர், ரோபோ சங்கர், காளி வெங்கட், ரமேஷ் திலக் என பலர் நடிப்பில் இப்படம் வெளியானது.

இப்படத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பாண்டியராஜன் நடித்திருப்பார்.

ஃப்ளூ காய்ச்சல்

ஃப்ளூ காய்ச்சலில் இருந்து தப்பிக்க இப்போது கொரோனாவுக்காக மாஸ்க், க்ளோவ்ஸ் அணிவது போல அப்படத்திலும் அணிந்திருப்பார்கள்,

குறிப்பாக நோய் பரவுதை தடுக்கும் பொருட்டு யாரும் பேசமாலே சைகையில் மட்டுமே புரிய வைப்பார்கள்.

இயக்குனரே இப்படத்தில் செய்தி சேகரிப்பாளராகவும், ஆர்.ஜே.பாலாஜி ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவராகவும், நட்சத்திரா அரசு மருத்துவமனை செவிலியராகவும், மைம் கோபி அரசியல் வாதியாகவும் கலக்கியிருப்பார்கள்...

அமைச்சரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு காட்சிகள்

தமிழ், மலையாளத்தில் வந்த இந்த படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்க படம் காமெடி கலந்த கதையாக எல்லோரையும் மகிழவைத்தது.

குறிப்பாக பாண்டிராஜனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு காட்சிகள், ரோபோ சங்கரின் ஒயின் ஷாப் அட்டகாசம் இப்படத்தில் கலக்கலான ஒன்று.

இப்படம் தற்போது கொரோனாவை நினைவூட்டுகிறது.

இவ்வளவு சொன்ன பிறகு படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கும் தானே...

மறுமுறை பார்ப்போம்.. மகிழ்வோம்....