Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் என்னிடம் இதை அடிக்கடி சொல்வார், விஜய் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த சிறப்பு பதில்

அஜித், விஜய் தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது, இந்நிலையில் அஜித், விஜய் இருவரும் இதுவரை ஒரு படத்தில் தான் சேர்ந்து நடித்துள்ளனர்.

அதன் பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்து அதிலிருந்து அஜித் விலகினார், இந்நிலையில் அஜித் குறித்து ஒரு பேட்டியில் விஜய் பேசியுள்ளார்.

இதில் ‘அஜித்துடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளேன், அதன் பிறகு நடிப்பதாக இருந்து ஒரு சில நாட்கள் நடித்து பின் அவர் படத்திலிருந்து விலகினார்.

ஆனால், அஜித் என்னுடன் நடித்த போது அடிக்கடி என்னிடம் என் அம்மாவின் சமையல் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.

அவருக்கு என் அம்மாவின் சமையல் என்றால் மிகவும் பிடிக்கும்’ என்று விஜய் கூறியுள்ளார்.