Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தல அஜித் இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வெளிவந்த மிக பெரிய வெற்றியடைந்த படம் நேர்கொண்ட பார்வை.

இப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்த படம் தான் 'வலிமை'. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது என்று சமீபத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தது.

இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்திருந்தது.

இப்படம் வரும் 2020 தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இப்படம் அடுத்த வருடம் 2021ஆம் பொங்கலுக்கு தான் வெளிவரும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

இதனால் தற்போது அஜித்தின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

loading...