Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரௌபதி படத்தின் உண்மையான வசூல் நிலை என்ன? வெளிப்படையாக கூறிய இயக்குனர்

அண்மையில் பல சிக்கல்களுக்கு நடுவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் திரௌபதி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் என பலர் நடித்திருந்தனர்.

நாடக காதல், ஆணவக்கொலை, போலி திருமணம் பதிவு, பண மோசடி, சாதிய பிரச்சனைகளுக்கு சாட்யையடி கொடுக்கும் விதமாக படம் அமைந்தது.

நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்த இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை யாரும் வாங்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க யாராவது முன்வந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என டிவிட் போட்டிருந்தார்.

இதற்கு ஒருவர் திரௌபதி படம் ரூ 10 கோடி லாபம் வந்தது என்று சொன்னீர்கள், அதில் ஒரு கோடியை செலவு செய்தால் என்ன என கேட்டிருக்கிறார்.

இதற்கு இயக்குனர் படத்தை தயாரிப்பு விலைக்கு தான் விற்றேன், அதை முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப கொடுத்துவிட்டேன். லாபம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கே.வேண்டும் என்றால் அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.