Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நின்று போன தனுஷின் பிரமாண்ட படம், இதுவரை பார்த்திராத பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆகிவிட்டார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். மேலும் அப்படம் மிக பெரிய வெற்றியும் கண்டது.

அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு இவர் நடித்த திரைப்படமான புதுப்பேட்டை திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணன்.

அவரின் இயக்கத்தில் திருடன் போலீஸ் எனும் திரைப்படத்தில் நடிக்கவிருந்தது. ஆனால் இப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கைவிடப்பட்டது என கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. நடிகர் தனுஷின் சகோதரி தயாரிப்பதாக இருந்தது.