Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், செம்ம சுவாரஸ்ய தகவல்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். அதோடு தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உருவெடுத்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் மே மாதம் வெளியாக தயாராக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கபட்டுள்ளது.

தற்போது இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தனுஷ் பணியாற்றிய இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன். இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிக வெற்றியடைந்து.

இதனிடையே இவர்கள் கூட்டணியில் கடந்த 2011ல் வெளியான ஆடுகளம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றி அடைந்தது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை டாப்சீ நடித்திருப்பார், ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அதற்கு நடிகை திரிஷா தான் நடித்திருக்க வேண்டியது.

மேலும், படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் உடன் திரிஷா இருக்கும் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைதளத்தில் பரவி வருகிறது.