Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவால் மட்டும் தமிழ் சினிமாவிற்கு இத்தனை கோடி நஷ்டமா! அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ் சினிமா வர்த்தகத்தில் வருடத்திற்கு வருடம் உச்சத்தை தொடுகிறது. இதில் பிகில் படம் புதிய மைல் கல்லாக ரூ 300 கோடியை எட்டி சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது கூட மாஸ்டர் அதையும் தாண்டி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படியிருக்க கொரோனாவால் இரண்டு மாதங்கள் எந்த புதிய படங்களும் வர முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது.

ஆம், மாஸ்டர், சூரரைப் போற்று, ஜகமே தந்திரம் போன்ற பெரிய படங்கள் தள்ளிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் தமிழ் சினிமாவிற்கு சுமார் ரூ 300 கோடி மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.