Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஊரடங்கு முடிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படம் தான் முதலில் வெளியாகிறது, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவரின் திரைப்படங்கள் இப்போதெல்லாம் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது.

மேலும் இந்த வருடத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் இடம் பொருள் ஏவல், இப்படம் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்தது.

கொரோனா ஊரடங்கு முடிந்தவுடனே இப்படம் திரைக்கு வரும் என படக்குழு தரப்பில் கூறபடுகிறது.