Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யால் கைவிடப்பட்டு பின்னர் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம், இந்த திரைப்படம் தெரியுமா?

தல அஜித் மற்றும் தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு மிக பெரிய நட்சத்திரங்களாக விளங்குகிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் தமிழகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளியாகும்.

இவர்கள் இருவருக்கும் மிக பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால், இவர்களை பற்றின எந்த செய்தி வந்தாலும் அதை இந்திய அளவில் ட்ரெண்டாகி விடுவார்கள் அவரின் ரசிகர்கள்.

மேலும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, தல அஜித் வலிமை திரைப்படத்தின் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் பற்றின ஒரு சுவாரஸ்யமான தகவல் தெரியவந்துள்ளது. இயக்குனர் சரண் நடிகர் விஜய்யிடம் ஒரு கதையை கூறியுள்ளார், பின்னர் சில காரணங்களால் அந்த கதையை நிராகரித்துள்ளர் தளபதி விஜய்.

அதன்பின் அதே கதையை தல அஜித்தை வைத்து இயக்கி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் அட்டகாசம். அப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.