Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் இந்த தேதியில் தான் வெளியாகிறதா? இணையத்தளத்தி வேகமாக பரவும் தகவல்..

தற்போது தமிழில் சினிமாவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாஸ்டர், இப்படம் எப்போது திரைக்கு வருமென ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டுஇருக்கின்றனர்.

கைதி, மாநகரம் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருவதால், கூடிய விரைவில் மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் மாதம் தளபதி விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது, அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.