Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்!

2013 ல் நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இப்படம் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது.

மேலும் இப்படத்தை தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டனர். தமிழிலும் இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் மோகன்லால் பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே முதல் பாகத்தில் வரும் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் இடம்பெற்று இருப்பதாகவும், அதில் பிரபல தமிழ் நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.