Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் படத்தில் பிக் பாஸ் கவின் நடிக்கிறார்? இயக்குனர் கூறிய தகவல்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பினை பெற்றிருந்தது.

இப்படத்தில் பிக் பாஸ் கவின் நடிக்கிறார் என்று பல விதமாக கேள்விகள் ரசிகர்களிடம் இருந்து சமூக வலைத்தளங்களில் எழுந்தது.

ஆம் அதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயனுடன் கவின் டாக்டர் படப்பிடிப்பில் இருந்த புகைப்படங்கள் தான்.

ஆனால் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அளித்த பேட்டியில் "கவின் டாக்டர் படத்தில் நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அவர் வேலை செய்து வருகிறார்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.