Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் செய்த சாதனைகள், என்னென்ன தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், வருடந்தோறும் இவரின் திரைப்படங்கள் வெளியாகி பல வசூல் சாதனைகள் புரியும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி, இப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டானது மட்டுமில்லாமல் தளபதி விஜய்யின் கேரியரை மாற்றியமைத்தது.

மேலும் இப்படம் கேரளாவில் வெளியாகி வசூலை சாதனையை படைத்தது, கேரள பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜயின் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாகவும் அமைந்தது.

அப்போது வரையில் அதிக வசூல் சாதனையில் இருந்த இந்தியன் திரைப்படத்தை முறியடித்து முதல் இடம் பிடித்தது. மேலும் இப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் அங்கு வரவேற்பை பெற்றது.