Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனது? வெளிவந்த ஷாக்கிங் தகவல்

மணி ரத்னம் இயக்கத்தில் கிட்டத்தட்ட ரூ 250 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, அதிதி ராவ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. அதன்பின் கொரோனா காரணமாக படக்குழுவினர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டனர்.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். இப்படத்தின் படப்பிடிப்பினால் மற்ற படங்களில் நடிக்க இயலாமல் போகும் என இப்படத்தில் இருந்து சில நடிகர், நடிகைகள் விலக முடிவு செய்துள்ளதாக ஷாக்கிங் தகவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் தான் 60% சதவிதத்திற்கும் மேலாக நடத்த முடிவு செய்து வைத்திருந்தார்களாம். ஆனால், கொரோனவால் இயலாமல் போய் விட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தர முடியாது என்று அந்தந்த வெளிநாடுகள் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

இதனால், கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடப்பது மிகவும் கடினம் தான். ஏற்கவே இப்படத்தை எடுக்க முயற்சித்து பல தமிழ் பிரபலங்கள் கைவிட்டனர். ஆனால், இயக்குனர் மணி ரத்தினத்திற்கு இது கைக்கூடி வந்தது. இருந்தாலும் தற்போது இந்த படம் ட்ராப் ஆக இருப்பதாக தகவல் வந்தது.

ஆனால் படம் ட்ராப் ஆகவில்லை, இப்படத்தை தொடங்க லேட் ஆவதால், மணிரத்னம் ஒரு காதல் படத்தை இந்த கேப்பில் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.