Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்த படம் இவருடன் தானா?

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் முன்னி இயக்குனராக இருப்பவர். இவர் குறுகிய காலத்திலே மிக பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட அணைத்து திரைப்படங்களும் வெற்றியடைந்துள்ளது. இதனால் பாலிவுட், டோலிவுட் என பலரின் கவனமும் இவர் பக்கம் திரும்பியுள்ளது.

அந்த வகையில் பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் ஒரு பேட்டியில் இயக்குனர் அட்லீயையும் அவர் இயக்கிய பிகில் திரைப்படம் குறித்தும் வியந்து பேசியுள்ளார்.

இது குறித்து குறுக்கையில் "நான் அட்லீ இயக்கிய பிகில் திரைப்படம் பார்த்தேன், அப்படம் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. மேலும் அவர் இயக்கிய தெறி, மெர்சல், ராஜா ராணி உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களுமே எனக்கு பிடித்திருந்தது.

மேலும் அட்லீ ஒரு "மேஜிஷீயன் அப் மசாலா" எனவும் கூறியுள்ளார். இயக்குனர் அட்லீயும் இதனை அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவரின் தயாரிப்பில் அட்லீ நடிகர் ஷாருக் கானை வைத்து திரிபடம் இயக்கப்போவதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.