Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட பொன்மகள் வந்தாள்! ரசிகர்கள் ஷாக் - படக்குழு நடவடிக்கை எடுக்குமா

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் அவரின் மனைவி ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேற்று அமேசான் இணையதளத்தில் படக்குழுவினரால் மே 29, இரவு 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. முதல் நாளில் அனைவரும் பேசும் படமாக பொன் மகள் வந்தாள் படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை இரவு 11.16 க்கே வெளியிட்டுள்ளது. முறைகேடாக வெளியீட்டின் மேல் படக்குழு நடவடிக்கை எடுக்குமா என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.