Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த செம மாஸ் தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் முதன் முறையாக தளபதி விஜய் கைகோர்த்து நடித்துள்ள படம் மாஸ்டர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் மாஸ்டர் படத்தை போலவே பல சிறு படங்களின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. மேலும் இந்த கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு சிறு படங்கள் தான் முதலில் வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது.

ஆனால் ஊரடங்கு முடிந்த பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தான், முதலில் திரையிடப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதை போல் வரும் ஜூன் 22, அதாவது தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தை குறித்து அப்டேட் வரும் என்று தெரிவிக்கின்றனர்.