Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கெளதம் மேனன் நடிக்கிறார்? அவரே கூறிய பதில்

ரொமான்டிக் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் வேட்டையாடு விளையாடு.

சமீபத்தில் இப்படத்தின் 2 பாகம் ஸ்கிரிப்ட் ஒர்க் போய்க்கொண்டு இருப்பதாக கெளதம் மேனன் கூறியிருந்தார்.

அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய கெளதம் மேனனிடம் " நீங்கள் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிப்பீர்களா" என்று தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டார்.

அதற்க தயங்காமல் பதிலளித்த கெளதம் மேனன் " கண்டிப்பாக நான் அதில் நடிக்க மாட்டேன், ஏனென்றால் அப்படத்தில் நடித்திருப்பவர் மிக பெரிய நடிகர், அவர் முன்னிலையில் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்" என்று கூறினார்.