Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 300 கோடி பட்ஜெட் படத்தை தவறவிட்ட தளபதி! அப்படி என்ன படம் தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர். சமீபத்தில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

தற்போது இவர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பணிகளை 2010 ஆம் ஆண்டே துவங்கி விட்டாராம்.

ஆனால் ஒரு சில காரணங்களால் தள்ளி போனது. அப்போது இப்படத்தில் நடிக்க முதலில் அணுகியது நடிகர் விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தான் என மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த தனா கூறியுள்ளார்.