Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா!

ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் கிரீடம், தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களை எடுத்தவர். இவர் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரன்வத் நடித்துள்ளார், அதோடு அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தின் இரண்டு டீசர் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் குறித்து கங்கனா மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் தலைவி படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வரும் படம், இப்படத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் மற்றும் நெட்ப்ளிக்‌ஷில் ரூ 55 கோடிக்கு சென்றுள்ளதாக கங்கனா கூறியுள்ளாராம்.

இவை விஜய், அஜித் படத்திற்கே இவ்வளவு கோடிகள் வியாபாரம் ஆவது கஷ்டம் தான் என கூறப்படுகிறது.