Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

OTT-தளத்தில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் சென்சேஷன் திரைப்படம்.. விவரம் உள்ளே

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 75 நாட்களுக்கும் மேலாக எந்த ஒரு தியேட்டரும் திறக்கப்படவில்லை. இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

இதனால் சில திரைப்படங்கள் OTT-யில் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆம் சமீபத்தில் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT-யில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மேலும் சில படங்களும் OTT-யை நோக்கி செல்லுகிறது.

இந்த நிலையில் அண்மையில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் எனும் படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் இப்படத்தை அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி OTT நிறுவனங்கள் படத்தின் உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். மேலும் விரைவில் இந்த படம் OTT-யில் ரிலீஸ் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.