Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம சென்சேஷன் இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ், ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் பட்டாஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படமும் லோக்கடவும் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது.

மேலும் மாரி செல்வராஜ் உடன் கர்ணன், கார்த்திக் நரேன் உடன் d43 போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்நிலையில் இவரின் d44 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோஹினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை நாமே நம் தளத்தில் கூறியிருந்த நிலையில், அதோடு ராட்சசன் இயக்குனருடன் தனுஷ் ஒருபடத்தில் கைக்கோர்க்கவுள்ளாராம்.