Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர், யார் தெரியுமா..

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து.

இப்படம் வெளியாகி மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தில் மீனா, ரகுவரன், சரத்பாபு, வடிவேலு, செந்தில், ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் நடிகர் சரத்பாபு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் மலையாள நடிகரான ஜெயராம்-யை நடிக்க அணுகியுள்ளார். ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இது குறித்து தற்போது பேட்டியில் நடிகர் ஜெயராம் பேசியுள்ளார். நடிகர் ரஜினியின் முத்து திரைப்படத்தை நிராகரித்த காரணம் என்ன என்று அவரிடம் கேட்டதற்கு.

முத்து திரைப்படத்தில் ரஜினியை கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியில் நான் நடிக்க வேண்டியிருந்தது. அதனால் தான் அந்த படத்தை வேண்டாம் என கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.