ஹரி இயக்கத்தில் சூர்யா ஆறாவது முறையாக நடிக்கவிருக்கும் படம் அருவா.
சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருந்தது.
தீபாவளிக்கு அருவா படம் வெளிவரும் என கூறியிருந்த நிலையில், கொரோனா காரணமாக இப்படத்தின் படபிடிப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பூஜையுடன் துவங்க பட குழு திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் இப்படத்தை முடித்துவிட்ட பிறகு தான் சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கும் வாடிவாசல் படத்தின் படபிடிப்பு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.