இரண்டு முறை ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தடையானது, எந்தெந்த படங்கள் தெரியுமா?
திரைப்படம் by Tony
தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வந்தது.
இப்படம் கொரொனா காரணமாக படப்பிடிப்பு நின்றுள்ளது. படப்பிடிப்பு கொரொனா பிரச்சனைகள் முடிந்து நடக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றவில்லை.
ஆனால், அஜித்துடன் ஷங்கர் ஜீன்ஸ் படத்தில் பணியாற்ற வேண்டியது, அப்போது பெப்சி தொழிலாளர் பக்கம் அஜித் நின்றதால் படம் நடக்காமல் போனது.
பிறகு எந்திரன் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து அதுவும் நின்றது குறிப்பிடத்தக்கது.