Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராயப்பன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்ததற்கு, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தான் காரணமாம், வெளியான சூப்பர் தகவல்..

கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் பிகில்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில், பிகில் திரைப்படத்தின் ராயப்பன் கதாபாத்திரத்தில் முதலில் வேறு சில நடிகர்களை நடிக்கவைக்க இருந்ததாகவும் கூறினார்.

மேலும் மும்பையை சேர்ந்த Cosmetologist ஒருவர், பாலிவுட் நடிகர் சுஷாந்த் நடித்த Chhichhore படத்தில் அவர் நடித்த இரண்டு கதாபாத்திரங்கள் குறித்த புகைப்படத்தை காண்பித்தார்.

அதன்பின் ராயப்பன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய்யை நடித்தால் நன்றாக இருக்கும் ஏன் நினைத்தோம். பின்னர் அந்த கதாபாத்திரத்திற்கான லுக் டெஸ்ட் செய்தோம் அது பிரமாதமாக இருந்தது.

இதனையடுத்து தளபதி விஜய்யே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கு முன் அவர் வயதான கெட்டப்பில் நடித்ததில்லை என்றதால் அது புதிதாக இருந்தது.