Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலையாள TRPயையும் விட்டுவைக்காத தளபதி விஜய், அங்கும் இவர் திரைப்படங்கள் படைத்த சாதனை..!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என அங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சென்ற வருடம் வெளியான இவரின் பிகில் திரைப்படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மொழி மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது.

இவரின் அடுத்த திரைப்படமும் இதேபோல் அங்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் என நம்ப படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் திரைப்படங்கள் இங்கு எப்போதுமே TRPயில் டாப்பாக இருக்கும்.

அந்த வகையில் மலையாள தொலைக்காட்சி TRP யிலும் டாப்பாக இருந்து வருகிறது இவரின் திரைப்படங்கள்.

அம் மலையாளத்தில் ஒளிபரப்பான (Non - Malayalam) திரைப்படங்களின் TRP ரேட்டிங் விவரம் தான் இது.

1. தெறி - 12 பாயிண்ட்ஸ்

2. Ala Vaikunthapurramloo - 11.17

3. கபாலி - 11 பாயிண்ட்ஸ்

4. Ala Vaikunthapurramloo(Re - tele) - 9.19

5. மெர்சல் - 8.9 பாயிண்ட்ஸ்