Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் கதை இது தான்! இணையத்தில் கசிந்த தகவல்..

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர்.

சினிமா மட்டும் இல்லாமல் இவர் சமுகத்திற்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.

மேலும் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வசூல் செய்ய தவறிவிட்டது என்று தான் கூறவேண்டும்.

தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமின்றி இவர் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றின கதை என்பதால் தந்தையால் அடக்க முடியாத காளையை மகன் அடக்குவது போல் கதை இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே அதில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் கூட தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.