பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அப்போதே இயக்கவிருந்த தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், யார் தெரியுமா?
திரைப்படம் by Jeeva
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாத்துறையை சேர்ந்த பலரும் திரைப்படமாக முயற்சி செய்து வந்தனர்.
ஆனால் நீண்ட முயற்சிக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் தான் அந்த நாவலை பொன்னியின் செல்வன் என்ற பெயரில் உருவாக்கி வருகிறார்.
அப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு மற்றும் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் 1958 ஆம் ஆண்டே பொன்னியின் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் நடிகர் எம். ஜி. ஆர் இறங்கியுள்ளார்.
மேலும் இப்படத்தை இயக்குவது மட்டுமின்றி, அதில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். அவருடன் சாவித்ரி, ஜெமினி கணேசன், பத்மினி, சரோஜா தேவி, நம்பியார் என நட்சத்திர பட்டாளமே நடிக்கவிருந்ததாம்.
ஆனால் சில பல காரணங்களால் இப்படம் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ.,