Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்த புதிய அப்டேட், இணையத்தில் பரவும் தகவல்..

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னணி இயக்குனராகவும் சிறந்த இயக்குனராகவும் விளங்குபவர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தது.

அசுரன் திரைப்படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் நடிகர் சூரியுடன் ஒரு திரைப்படமும் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இவரும் தளபதி விஜய் இணைந்து உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களை முடித்தபின் இந்த கூட்டணி அமையும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்காக தளபதி விஜய் 150 நாள் தனது கால்ஷீட்டை ஒதுக்கவுள்ளதாகவும், எனவே அந்த வருடத்தில் நடிகர் தளபதி விஜய் இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.