Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் அடுத்தப்படத்தின் ஹீரோ இந்த முன்னணி நடிகரா? ரசிகர்கள் கொண்டாட்டம்..

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு என்ற ரசிகர்கள் பலம் இருக்கும். அந்த வகையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர் சூர்யா.

இவர் நடிப்பில் தற்போது சூரரைப் போற்று படம் உருவாகியுள்ளது. இந்த படம் கோடை விடுமுறைக்கு வரவிருந்தது.

ஆனால், கொரொனா காரணமாக இப்படத்தின் ரிலிஸ் தள்ளி சென்றுள்ளது, மேலும், இப்படத்தை OTTயில் வாங்க பல போட்டிகள் நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் OTTயில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதை இவருடன் சேர்ந்து சுமார் 7 இயக்குனர்கள் வரை நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதில் ஒரு பகுதியை மணிரத்னம் இயக்க, அதில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

சூர்யா, மணிரத்னம் கடைசியாக ஆயுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 16 வருடங்கள் கழித்து இவர்கள் இணையவுள்ளார்கள்.