Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி ரூ 100 கோடி வசூல் கிடையாது! அந்ததஸ்து செத்துவிட்டது! பிரபல இயக்குனர் வேதனை

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா முடங்கிவிட்டது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன. இதனால் சினிமா தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளானார்கள்.

பொது முடக்கம் இன்னும் அமலில் இருக்கின்றது. இதனால் இந்தியா முழுக்க சினிமா படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த இயக்குனர் சேகர் கபூர் ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியாவதால் தியேட்டர் வசூல் சார்ந்த நட்சத்திர அந்தஸ்து இனி செத்துவிட்டது.

குறைந்த பட்சம் அடுத்த ஒருவருடத்திற்கு தியேட்டர்களை திறக்க முடியாது. முதல் வாரத்திலேயே ரூ 100 வசூல் என விளம்பரம் செய்ய முடியாது.

நட்சத்திரங்கள் ஓடிடி தளங்களை நாட வேண்டிய நிலைமை உள்ளது. இல்லையெனில் அவர்கள் தங்களுடைய சொந்த செயலியில் படத்தை வெளியிட வேண்டும், தொழில்நுட்பட மிக எளிமையானது என அவர் கூறியுள்ளார்.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன, ஆலியா பட், அபிஷேக் பச்சன், வருண் தவான் என பல நடிகர்களில் படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.