Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனர்கள் தங்கள் திரைப்பயணத்தில் மிகவும் சறுக்கிய படம் எது தெரியுமா? லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்த வரை இயக்குனர்களுக்கு கூட பெரிய பேன் பாலோயிங் உள்ளது. ஷங்கர், மணிரத்னம் என பல இயக்குனர்களுக்கு ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் இந்த இயக்குனர்கள் மிகவும் தங்கள் திரைப்பயணத்தில் சறுக்கிய இடங்கள் எது என்பதை பார்ப்போம்...

ஷங்கர்-பாய்ஸ்

ஷங்கர் படம் இதுநாள் வரை எதுமே பாக்ஸ் ஆபிஸில் பெயிலியர் ஆனது இல்லை, பல விமர்சனம் வந்த ஐ படமே ரூ 200 கோடி வசூலை தாண்டியது. ஆனால், பாய்ஸ் படம் இப்பொழுது பலரும் கொண்டாடினாலும், படம் வந்த போது பெரும் மோசமான விமர்சனத்தை பெற்றது.

மணிரத்னம்-கடல்

மணிரத்னம் என்ன தான் அலைப்பாயுதேவிற்கு பிறகு பெரிய தோல்வி படங்கள் கொடுக்க வில்லை என்றாலும், அவர் படத்திற்கு என்று ஆடியன்ஸ் இருந்துக்கொண்டே தான் இருந்தனர், ஆனால் அவர்களையும் சோதித்தது கட்ல தான்.

கே.எஸ்.ரவிகுமார்- லிங்கா

கே.எஸ் படம் என்றாலே நம்பி திரைக்கு போகலாம், அதுவும் ரஜினியுடன் என்றால் சொல்லவா வேண்டும், அப்படியிருக்க இவர்கள் கூட்டணி ஏமாற்றியது லிங்கா தான்.

பாலா-தாரை தப்பட்டை

பாலா படம் என்றாலே ஒரு யதார்த்தம் மற்றும் ராவ் ஆக இருக்கும், அந்த வரிசையில் வந்தது தான் தாரை தப்பட்டை ஆனாலும் இது ஈர்க்கவில்லை.

செல்வராகவன் - இரண்டாம் உலகம்

செல்வராகவன் படம் ஓடுதோ இல்லையோ ரசிகர்களை கவரும், ஆனால் அவர்களையும் சேர்த்து சோதித்தது இரண்டாம் உலகம் தான்.

ஹரி- சேவல்

ஹரி படம் என்றாலே ஜெட் வேகத்தில் போகம், இதை மாற்றி பெரிதும் ரசிகர்களை நெலிய வைத்தது சேவல் தான்.

இதே போல் சொல்லவேண்டுமென்றால்..

சரண் -அசல்

லிங்குசாமி-ஜி

கௌதம் மேனன் - நடுநிசி நாய்கள்

தரணி- குருவி