Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியாகி இத்தனை வருடங்கள் கழித்தும், TRP யில் அஜித், சூர்யாவின் படங்களை முறியடித்த ரஜினி திரைப்படம்..

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து.

இப்படம் வெளியாகி மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் ஜப்பான் நாட்டிலும் மிக பெரியயடைந்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது லாக்டவுன் என்ற காரணத்தினால் பிரபல தொலைக்காட்சிகளில் வாரம் தோறும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி ஞாற்றுக்கிழமை அன்று சன் தொலைக்காட்சியில் ரஜினியின் முத்து திரைப்படத்தை ஒளிபரப்பினர்.

மேலும் தற்போது BARC நிறுவனம் கடந்த ஜூலை 18 தேதி முதல் ஜூலை 24 வரையிலான அதிகம் பார்க்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் முத்து திரைப்படம் (10, 180) பெற்று முதலிடத்திலும், அதனை தொடர்ந்து சிங்கம் (9347) புள்ளிகளிலும், வீரம் திரைப்படம் (6666) புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

மேலும் முத்து திரைப்படத்திற்கு தற்போது வரையில் மக்களிடம் பெரும் ஆதரவை குறித்து ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.