Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டிலே இரு, பிகில் பாரு...விஜய் ரசிகர்கள் ஊர் முழுவதும் ஒட்டிய போஸ்டர்...இதோ..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவருக்கு தமிழகம் எங்கும் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவரின் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படமும் லாக்டவுன் முடிந்த பிறகு வெளியாகும் என கூறபடுகிறது. மேலும் இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் ஆன படம் பிகில். இப்படம் ரூ 300 கோடி வரை வசூல் செய்தது.

இப்படம் நாளை சன் டிவியில் இரண்டாவது முறையாக ஒளிப்பரப்பு செய்கிறார்கள், இந்த படத்தை பார்க்கும்படி விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர், தெறி படத்திற்கும் விஜய் ரசிகர்கள் இப்படி செய்தது குறிப்பிடத்தக்கது.