Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூலுக்கு வரும் செக்..இதை சமாளிப்பாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வம் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர்.

அதே போல் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் இந்திய ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவர காத்திருக்கும் படம் கே.ஜி.எப் சாப்ட்டர் 2.

மாஸ்டர் படம் கடந்த எப்ரல் மாதம் வெளிவரும் என அறிவித்திருந்த நிலையில், கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் மூடப்பட்டு ரிலீஸ் தள்ளிப்போனது.

ஆனால் மாஸ்டர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட நிலையில் கொரானா தாக்கம் முழுமையாக குறையவில்லை என்றால் மாஸ்டர் படம் கண்டிப்பாக அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளியாகும்.

அதை போல் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எப் 2 படத்தின் சில காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்க வேண்டும். இதனால் இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது கே.ஜி.எப் 2 படத்தை வரும் 2021 ஆங்கில புத்தாண்டு அல்லது 2021 பொங்கல் அன்று தான் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விஜய்யின் மாஸ்டர் படமும், யாஷ் நடிப்பில் உருவாகி வரும்

கே.ஜி.எப் 2 படமும் பொங்களுக்கு வெளிவந்தால் பெரும் வசூல் வேட்டையாக தான் இருக்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குகுவுடம் இருந்து எப்போது வெளிவரும் என்று..