Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யுவனின் மயக்கும் இசை, ஹரிஸ், ரைஸா கெமிஸ்ட்ரி, இளன் துள்ளனான காட்சிகள், அட 2 வருஷம் ஆச்சா..!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் சிறுபட்ஜெட் என்றாலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும்.

அந்த வகையில் யுவன் தயாரிப்பில் முழுக்க முழுக்க இளைஞர்கள் பணியாற்றி வெளிவந்த படம் பியார் பிரேமா காதல்.

இப்படம் ரிலிஸிற்கு முன்பே யுவனின் துள்ளல் இசையில் ஹே பெண்ணே பாடல் செம்ம ஹிட் அடித்தது.

அதனாலேயே படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியது, அதை தொடர்ந்து படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

சரி ஹரிஸ், ரைசா பிக்பாஸ் பேமஸ் இதை தாண்டி என்ன செய்ய போகிறார்கள் என்று பார்த்தால், ஸ்கிரீனில் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி.

பார்க்கும் ரசிகர்கள் வெளியே வெட்கப்படும் அளவிற்கு கலக்கியிருந்தனர்.

அறிமுக படத்திலேயே ஒரு சர்ச்சையான கான்செப்ட் என்றாலும், படம் முடியும் போது அட இதுவே நல்லாருக்கே என்று சொல்லும் அளவிற்கு இளன் நேர்த்தியாக எடுத்திருந்தார்.

PPK திரைக்கு வந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகியுள்ளது, இதை இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.