Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் ரசிகர்கள் நற்பணி மன்றத்தை கலைத்தது ஏன்? உண்மை தகவல் உள்ளே..

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் கதாநாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.

கொரானா காரணமாக தள்ளிப்போய் வுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொரானா தாக்கம் முழுமையாக குறைந்த வுடம் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

திரையுலகில் உள்ள ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் நற்பணி மன்றம் வைத்திருப்பார்கள்.

அதே போல் தான் சில ஆண்டுகளுக்கு முன் தல அஜித்துக்கும் ரசிகர்களின் நற்பணி மன்றம் இருந்தது. ஆனால் அதனை அஜித் கலைத்து விட்டார்.

இந்நிலையில் அதற்கு முக்கிய காரணம் இருந்தது நடிகர் அஜித்தின் பேச்சை அவரின் ரசிகர்கள் கேட்காமல் சில அரசியல் ரீதியாக அஜித்தின் பெயரை பயன்படுத்தியது செய்த விஷயங்கள் தான், என தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.