அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாஸ்டர், வலிமை குறித்து செம்ம மாஸ் அப்டேட் இதோ
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் மற்றும் தளபதி விஜய்யின் மாஸ்டர், வலிமை படங்களின் ரிலீசுகாக தான் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
மாஸ்டர் படத்தின் முழு பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் கொரானா தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு உடனடியாக வெளிவரும்.
ஆனால் அஜித்தின் வலிமை படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு பணிகள் கொரானா தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு தான் தொடகும்.
அதனால் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த வெளிவர கோடை விடுமுறை ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு இன்னும் தாமதமாக தான் துவங்குமாம், இதனால் வலிமை கண்டிப்பாக அடுத்த வருடம் 2021 தீபாவளிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது.
மாஸ்டர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த வருடம் 2021 பொங்கலுக்கு தான் வெளியாகும் என சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் படக்குழு விடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.