Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர், யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர், ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தின் வெளியிட்டிற்காக தான் பலரும் ஆவலுடன் உள்ளனர்.

ஆனால் கொரோனா காரணமாக இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

அதன்பின் தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் இப்படத்தில் முதன்முறையாக தளபதி விஜய்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் பிரபல எழுத்தாளரான ஆர். செல்வராஜ் தளபதி 65 இணைத்துள்ளாராம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதிவருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆர்.செல்வராஜ் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடைசியாக இவர் அலைபாயுதே திரைப்படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.