Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று திரைப்படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் தெரியுமா?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக திகழ்பவர். மேலும் இவர் நடிப்பின் நாயகன் என்றும் இவரது ரசிகர்களால் அழைக்கப்படுவார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் OTT யில் வெளியாகவிருக்கும் நிலையில், பெரிய எதிர்ப்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் அருவா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தின் முழு ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 30 தேதி வெளியாகவுள்ள சூரரை போற்று திரைப்படத்தின் ரன் டைம் 2 மணிநேரம் 33 நிமிடங்கள் வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.