ஆசை படத்தில் அஜித்தின் வேடத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகர்தானாம்- யாரு தெரியுமா?
வசந்த் இயக்கத்தில் அஜித், சுவலட்சுமி, பிரகாஷ் ராஜ் என பலர் நடிப்பில் தயாராகி மாபெரும் வெற்றிகண்ட படம் ஆசை.
இப்படம் வெளியாகி இன்றோடு 25 வருடங்கள் ஆகிவிட்டன, வழக்கம் போல் ரசிகர்கள் படத்திற்கான டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
படத்திற்கு முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்று தான் பெயர் வைக்க முடிவெடுத்தார்களாம், அது வேண்டாம் என்று கண்ணே என தேர்வு செய்தார்களாம்.
அதுவும் சரியாக வராததால் இறுதியாக படத்திற்கு ஆசை என்று பெயர் வைத்துள்ளனர்.
அதோடு முக்கிய விஷயம் என்னவென்றால் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க வைக்க இயக்குனர் வசந்த் சூர்யாவை தேர்வு செய்தாராம். அவர் அப்போது சினிமா பக்கம் வரவில்லை என்பதால் அடுத்த தேர்வாக அஜித்தை செலக்ட் செய்துள்ளார்.