Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாடிவாசல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க போவது இந்த சென்சேஷன் நடிகையா?

முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடிக்கவுள்ள படம் தான் வாடிவாசல். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க இருக்கிறார்.

சூரியின் படத்தை இயக்கி முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

இப்படத்தில் சூர்யாவுடன் முதல் முறையாக ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஆண்ட்ரியா வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதத்திற்கு மேல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.