முன்னணி நடிகர்கள் ஒதுக்கிய கதையை சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டானது- என்ன படம் தெரியுமா?
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தமிழ் திரையுலகில் பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக 7ஆம் அறிவு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களை கூறலாம்.
இந்நிலையில் அப்படி சூர்யாவின் வெற்றி படங்களில் முக்கியமான திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல்.
சூர்யா ஜோதிகா நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருந்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தை சூர்யா முதலில் வேண்டாம் என்று நிராகரித்தாராம். அவர் மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 10 ஹீரோக்கள் அந்தக் கதையை நிராகரித்துள்ளனர்.
இறுதியில் ஜோதிகாவின் சிபாரிசில் மீண்டும் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளாராம்.