Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 61 படத்தின் இயக்குனர் இவரா? யாரும் எதிர்ப்பாரத கூட்டணி..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படம் கொரொனா பிரச்சனைகள் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதி விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற ஆர்வம் தற்போது தொற்றிக்கொண்டது.

இந்நிலையில் வலிமை முடிந்து அஜித் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்காக நடிக்கவுள்ளார், இப்படத்தை சூரரை போற்று இயக்குனர் சுதா இயக்கவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் அவருடைய யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் செம்ம ட்ரெண்டிங் ஆக உள்ளது, இது உண்மையா என்பது அஜித் தரப்பு சொன்னாலே உண்டு.