Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு? சோகத்தில் ரசிகர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வரை திரையரங்குகள் திறக்காமல் இருக்கும் பட்சத்தில், எந்த ஒரு திரைப்படமும் வெளிவர இயலவில்லை.

ஆனால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகின.

அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி OTT யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சில படங்கள் OTT யில் வெளியாக உள்ளன. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் OTT யில் வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் அனிருத் இசையமைத்துள்ளார், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா தமிழில் அறிமுக நாயகியாக நடித்துள்ளார்.