இந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி கொண்டாட்டத்தை எதிர்பார்த்திருந்த தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல மாஸ்டர் படக்குழுவிற்கும் ஏமாற்றம் தான். கொரோனாவால் மாஸ்டர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போனது.
கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்க, மாளவிகா, சாந்தனு, ஸ்ரீனாத், ஸ்ரீமன், சஞ்சீவ், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா என பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே அனிருத் இசையில் பாடல்கள் பலரையும் கவர்ந்துவிட்டன.
மாஸ்டர் படத்தின் வசூல் எப்படியும் பிகில் படத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் 2021 ல் பொங்கல் கொண்டாடத்துடன் தீபாவளிக்கு தளபதி 65 படத்தையும் வெளியிட வேண்டும் என கூறி வருகின்றனராம்.
இதற்கான பதிலை படக்குழுவினர் தான் சொல்லவேண்டும்.