Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கில்லி 2? - தயாரிப்பாளர் ரெடி! செம்ம மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி கதாநாயகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின் 4ஆம் முறையாக தனது நண்பரும், முன்னணி இயக்குனருமான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என கூறப்படுகிறது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராவும் மாஸ் ஹீரோவாகவும் மாறிய தருணம் என்றால் அது கில்லி படத்தில் தான். தரணி இயக்கத்தில் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அப்போதே பெரும் வசூல் சாதனை செய்து வெற்றிபெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்று அனைவரும் அறிவோம். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும், அதனை நான் தயாரித்து வெளியிட தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா.

இவர் சரோஜா, கடவுள் இருக்கான் குமாரு, சார்லி சாப்ளின் 2, அக்னி சிறகுகள் ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.